ஏற்றுமதி கொள்ளடக்கம்

மலர் –1 இதழ் – 4

ஏற்றுமதி கொள்ளடக்கம் – விலையிடல்

ஏற்றுமதி என்பது பொருட்களை வர்த்தக ரீதியாகவோ அல்லது விற்பனைக்காகவோ ஒருநாட்டிளிருந்து இன்னொரு நாட்டிற்கு அனுப்புகிற செயலாகும். அது இறக்குமதிக்கு நேர் மாறானதகும் . எடுத்துக்காட்டாக “அ “ என்ற இந்தியாவிலுள்ள நிறுவனம் தனது பொருட்களை இந்தியாவிலிருந்து  “ஆ “ என்ற ஜெர்மனியிலுள்ள நிறுவனத்திற்கு விற்பனைக்காக அனுப்புகிறது ,இதில் அ என்ற நிறுவனம் ஏற்ரறுமதியாளர்ர் ஆ நிறுவனம் இறக்குமதியாளர் ( இன்னொரு நாட்டிலிருந்து வாங்குபவர் ) .

ஏற்றுமதி என்பது பொருட்களை மட்டுமின்றி சேவைகளையும் ஏற்றுமதி செய்ய இயலும் .எடுத்துக்காட்டாக பயணம் , சுற்றுலா , போக்குவரத்து , கட்டமைப்பு , வடிவமைப்பு  மற்றும் பொறியியல் சேவைகள் ,கல்வி மற்றும் பயிற்சி சேவைகள் , வாங்கி , நிதி மற்றும் காப்பீடு சேவைகள் , பொழுதுபோக்கு, தகவல் சேவைகள் மற்றும் வர்த்தக சிறப்பு சேவைகள். .வாடிக்கையாளர்களிடம் சேவைகளைப்பற்றி கருத்து பரிமாற்றம் செய்து வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தேவைகளுக்கேற்ப செயல்படுவது சறறு சிரமமானது . ஏற்றுமதி இறக்குமதி உலக வர்த்தகத்தில் முக்கிய அம்சமாகும் .இந்த இரண்டுமே உலக வர்த்தகத்தினை வடிவமைக்கின்றன . வெளிநாட்டு சந்தை விரிவாக்கத்திற்கு ஏற்றுமதி எளிய பிரபலமான வழியாகும்.எனவே  உலக வர்த்தகத்தில் இது முக்கிய அம்சமாகும்.

ஏற்றுமதி பல சாதகங்களை கொண்டது . வெளிநாடுகளில் விற்பனை விலை சற்று அதிகமாயிருப்ப்பதால்  ஏற்றுமதி நிறுவனகள் விற்பனை மற்றும் இலாப விகிதங்களை உயர்த்த இயலும் . ஏற்றுமதி தேவைகளுக்கேற்ப உற்பத்தி அளவு அதிகரிப்பத்தின் மூலம் நிறுவனங்கள் உற்பத்தி அடக்க விலையினை குறைக்க இயலும் . ஏற்றுமதி நிறுவனகள் உள்நாட்டு சந்தையினை மட்டுமே நம்பி யிராததால் ஏற்றுமதி இடர் பரவலையும் (spreading of risk, ) தருகிறது. ஒரே நாட்டை சார்ந்திருப்பது அரசியல் ,பொருளாதார இடர் சமயங்களின் போது அபாயகரமானதாகும் , ஏற்றுமதி வெளிநாட்டு விரிவாக்க செலவுகளையும் குறைக்கிறது

இருந்தாலும் ஏற்றுமதியினால் சில சாதகமற்ற தன்மைகளும் இருக்கின்றன. வெளிநாட்டு சந்தையில் நிறுவனகளின் இயக்கம்கள் நேரிடையாக இருப்பதில்லை மேலும் வெளிநாட்டு சந்தையினை பற்றிய தெளிவும் ஒரு வரம்புக்குட்பட்டே இருக்கும், எனவே வெளிநாட்டு சந்தையில் நிலவும் திடமான வாய்ப்புக்களை ஒருவேளை நழுவ விடக்கூடும். ஏற்றுமதி வர்த்தக தடைகளுக்கு உட்பட்டது ,இந்த தடைகள் அதிகமானால் நிறுவனகள் ஏற்றுமதி நடவடிக்கைகளை நீக்கிவிடும நிலை ஏற்படலாம் .இன்னொரு உண்மை என்னவென்றால் இந்த நிறுவனகள் இறக்குமதி வரி,இறக்குமதி விகிதம் போன்ற வர்த்தக தடைகள மீறி செயல்பட இயலாது .

உலகமயமாக்கல் (Internationalization)

நிறுவனகள் தங்களின் இயக்கங்களை பல வழிகளில் உலகமயமாக்கி கொண்டிருக்கின்றன, அவை நுழைவு வகைகள் (entry modes) என அழைக்கப்படுகின்றன.,பொருட்களை மற்றொரு நாட்டிற்கு அனுப்புவது –ஏற்றுமதி -, வெளிநாட்டில் விற்பனை அலுவலகங்களை நிறுவுவது , வெளிநாட்டு நிறுவனங்களுக்கு உற்பத்தி அனுமதி வழங்குவது – உரிமம் – , வெளிநாட்டு நிறுவனங்களுடன் பங்குதாரரர்வது – கூட்டு தொழில் முறை) -, வெளிநாட்டு நிறுவனங்களை தன்னகப்படுத்துவது (acquiring) மற்றும் வெளிநாட்டில் உற்பத்தி ,விற்பனை வசதிகளை துவக்கமுதல் தொடங்குவது ((Greenfield investment). மற்ற நுழைவு வகைகளுக்கு வெளிநாட்டு சந்தையினை பற்றிய அறிவு தேவைப்படுவதை போல் ஏற்றுமதிக்கு அதிக செலவும் அறிவும் தேவையிராது. எனவே ஏற்றுமதி உலகமயமாக்கலில் மிக எளிய குறைந்த இடர்களை உடைய சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்  விரும்புகிற வழியாகும் .. ஏற்றுமதி நிறுவனத்தின் நாட்டில் பொருட்கள்  உற்பத்தி செய்யப்படுகின்றன என்றாலும் சந்தைப்படுத்துவது (marketing ) பகிமாண்ம் (distribution, ) மற்றும் வாடிக்கையாளர் சேவைகள் (customer service ) பொருட்கள் அனுப்பபடுகிற நாட்டில் நடந்தேறுகின்றன.

வெற்றி அம்சங்கள் (Success Factors ) :

நிறுவனகள் ஏற்றுமதி நடவடிக்கைகளில் பல அம்சங்களை பரிசீலிக்க வேண்டியிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக நிர்வாகம் ஏற்றுமதி சம்பந்தமாக உறுதியான நீடித்த நிலைப்பாடு கொண்டிருக்க வேண்டும். ஏற்றுமதி என்பது தினசரி நடவடிக்கையல்ல ஏனென்றால் அது நீண்ட கால திட்டத்தை கவனிக்க வேண்டியதொன்று. இரண்டாவதாக உள்நாட்டில் விற்கப்படுகிற ஒவ்வொரு பொருளும் இன்னொரு நாட்டில் விற்கப்படுவதில்லை எனவே நிறுவனகள் தந்து பொருட்கட்கு வெளிநாட்டில் நிலவும் சந்தை செறிவுள்ளதா என்பதை முதலில் தீர்மா னித்து கொள்ள வேண்டும் . அதைபோல உள்நாட்டு வெளிநாட்டு சந்தைக்கும் இடையில் நிலவும் தேவைகள், விருப்பம் ,ஆர்வம                   மற்றும் நிபந்தனைகள் வெளிநாட்டு சந்தை விற்பனைக்கு அவசியமான அறிகுறிகளாகும். நிறுவனத்தின் ஒரு பொருள் வெளிநாட்டு சந்தையில் கிடைக்காத தனி சிறப்பம்சந்த்தை கொண்டிருக்குமானால் அந்த பொருளுக்கு வெளிநாட்டு சந்தையில் மிகுந்த விற்பனை வரவேற்பு இருப்பதற்கான அறிகுறியாகும். மூன்றாவதாக தேவை தன்மைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன , உள்நாட்டு தேவை குறைவாக இருக்கும் ஒரு பொருள் வெளிநாட்டு சந்தையில் அதிகமாயிருக்கலாம் . இந்த சூழ்நிலையில் அந்த பொருளுக்கு வெளிநாட்டு சந்தையில் விற்பனை அதிகமாயிருக்கும் .

ஏற்றுமதிக்கு நிறுவனம் ஆயத்தமா யிருந்தாலொழிய வெளிநாட்டு சந்தை விற்பனை வாய்ப்புக்களை அறிந்து கொள்வதில் அர்த்தமில்லை ஏற்றுமதி நடைமுறைகடகு கூடுதலான வளமும் ,உறுதி தன்மையும் . தேவைப்படுவதால் , நிறுவனங்கள் தன்னிடம் வளமும் ,உறுதி தன்மையும் தனது நிறுவன கொள்கைகட்கு ஏற்றவகையில் உள்ளதா என்பதை தீர்மானித்து கொள்ள வேண்டும் . நிறுவனம் ஏற்றுமதிக்கு ஆயத்தமாயிருந்தால் ஏற்றுமதி  பொருட்கள் அதில் தேவைப்படும் சில மாறுதல்கள் பற்றியும் , ஏற்றுமதி விலை ,இலலக்கு நாட்டில் ஏற்றுமதிக்கு தேவையான ஆற்றல்கள் பற்றியெல்லாம் சீரான திட்டமிடல் மிக அவசியம் .

ஏற்றுமதியில் பொருட்களை கடல்வழியே அனுப்ப வேண்டியிருக்கும் எனவே சரக்கு பரிமாற்ற ஆளுமை ஏற்றுமதி வெற்றி க்கு முக்கிய அம்சமாகும் ஏனென்றால் விலை போட்டிவிலை அம்சத்தை சரக்கு பரிமாற்ற செலவு பாதிக்க கூடும் .எனவே இது தொடாபாக சரக்கு பரிமாற்ற வர்த்தகர்களிடம் நீண்ட நெருக்கமான தொடர்பு கொண்டு இருதரப்பினருக்கும் பயன் தரும் வகையில் செயல்பட வேண்டும் .

ஏற்றுமதி நடவடிக்கைகளில் ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு விதமாக திட்டமிட்டு செயல்படுத்துகின்றன. சில நிறுவனகள்                      மற்ற வைகளிடமில்லாத முறைப்படுத்தப்பட்ட செயல்முறைகளை கொண்டிருக்கின்றன சில அனுபவம் மிகுந்த மேலாளர்கள் முறைப்படுத்தப்பட்ட செயல்முறைகளை பயன்படுத்தி ஏற்றுமதி வெற்றியினை அதிகரிக்கின்றனர் , இதுபோன்ற உலக வர்த்தக தன்மைகளை சீரய்ந்து  முறைப்படுத்தப்பட்ட ஏற்றுமதி செயல்முறைகடகு திறமை ,தகுதி மற்றும் ஏற்றுமதி செயலாக்க நிலைப்பாடு அவசியமாகிறது .

ஏற்றுமதி வகைகள் :

ஏற்றுமதி வடிவமைபிலும் ,செயலக்கத்திலும் நிறுவனகள் நேரடி ஏற்றுமதி, மறைமுக ஏற்றுமதி போன்ற வேறுபட்ட அணுகுமுறைகளை கொண்டுள்ளன. மறைமுக ஏற்றுமதியில் சில நிறுவனகள் பொருட்களை உள்நாட்டு சந்தையில் உற்பத்தியாளர்களிடம் வாங்கி அவைகளை ஏற்றுமதி செய்கின்றன . இதில் வாங்குபவர்கள் உள்நாட்டிலேயே இருப்பதாலும் அவர்களே ஏற்றுமதி பிரச்சினைகளை எதிர்கொள்வதாலும் உற்பத்தியாளர் களுக்கு எவ்வித இடருமில்லை.

மற்றொரு மறைமுக ஏற்றுமதியில் நிறுவனகள் பொருட்களை இடைத்தரகர் மூலமாக ஏற்றுமதி செய்கின்றன இதில் வெளிநாட்டு வாங்குபவர்களிடம் தொடர்பு கொண்டுள்ள மற்றொரு நிறுவனத்தை உள்நாட்டு நிறுவனகள் பயன்படுத்தி கொள்கின்றன; ஏற்றுமதி மேலாண்மை நிறுவனகள் , ஏற்றுமதி வர்த்தக நிறுவனகள் ,உலக வர்த்தக ஆலோசகர்கள், ஏற்றுமதி முகவர்கள் , வர்த்தகர்கள் , மறு வர்த்தகம் செய்வோர்கள் இடைத்தரகர்கட்கு எடுத்துக காட்டுகளாகும் வெளிநாட்டு சந்தையினைப்ப்றறி குறைந்த அல்லது தெளிவற்ற அறிவு கொண்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக அமைப்புக்கள் இது போன்ற ஏற்றுமதியினை விரும்புவதால் வெளிநாட்டு சந்தையினைப் ப்ற்றி கூடுதலான அறிவும் வெளிநாட்டு நிருவனகளுடன் நெருங்கிய தொடர்பும் கொண்டு நேரடி ஏற்றுமதியாளர்களாக தங்களை மாற்றிக்கொள்ள இயலும் .

நேரடி ஏற்றுமதியில் உற்பத்தியாளர் தனது பொருட்களை வெளிநாட்டு வாங்கு பவர்கட்கு நேரடியாக ஏற்றுமதி செய்கின்றனர். இந்த வகையான ஏற்றுமதியில் ஏற்றுமதியாளர் எல்லா பொறுப்புகளையும் தானே எடுத்து கொள்வதால் இது அதிக பிரச்சினைகளை கொண்டிருந்தாலும் அதிக இலாபத்தையும் நீடித்த தொடர்பையும் தரக்கூடிய சிறந்த அணுகு முறையாகும் .

ஏற்றுமதிக்கு விலையிடல் : இது பற்றி முன்பே விவரிதிருந்தாலும் இங்கும் இதுபற்றி கூற வேண்டியது அவசியமாகும் .ஏற்றுமதி பொருளுக்கு விலையியாடல் சிரமமான செயல் ஏனென்றால நிறுவனங்கள் போட்டி நிலைக்கேற்ப விலையிட வேண்டும் மற்றும் விலையினை பாதிக்க கூடிய பல்வேறு அம்சங்களை பரிசீலிக்க வேண்டும். நிறுவனம் இலாபம் பெறக்கூடிய வகையில் பொருட்களுக்கு விலையிடல் போன்றே ஏற்றுமதி பொருளுக்கும் விலையி வேண்டும். . ஏற்றுமதி விலையினை பாதிக்கக்கூடிய உள்நாட்டு வெளிநாட்டு அம்சங்கள் உள்ளன. பொருளின் அடக்கம் முக்கிய உள்நாட்டு அம்சமாகும் . சந்தை தேடல் (market search) கடன் தன்மை , பயண செலவுகள், பொருட்களை ஏற்புடையதாக்குவது (product adaptation ) ,பல்வேறு பொதித்தல் முறைகள் (packaging,) ,பரிமாற்றம் (transportation ) மற்றும் தரகு தொகைகள் போன்றவைகள் நிறுவனத்தை பாதிக்கும் உள் விவகாரங்களாகும் .பகிர்மாண அமைப்பு முறை (distribution system) தேர்வு விலையினை பாதிக்கலாம். நீண்ட பகிர்மாண அமைப்பு கொள்ளடக்கத்தினை அதிகரிக்கசெய்யும்,இலாபத்தை குறைக்கும் , போருட்களுக்ளில் மாறுதல்களை செய்து ஏற்புடையதாக்குவதனால் பொருட்களின் கொள்ளடக்கத்தினை கூட்டும். இருந்தாலும் இதுபோன்ற மாறுதல்களை கொண்ட வித்தியாசமான பொருட்களின் விலையினை அதிகப்படுத்த வாய்ப்பளிக்கும்.

வழங்கல் மறறும் தேவை  (are supply and demand ) இடம் , தட்பவெட்ப நிலை ,செலாவணி ஏற்ற இறக்கம் ,அரசின் தலையீடு மற்றும் விதிமுறைகள் போன்ற வெளிச் சந்தையின் சூழ்நிலை , விலையினை பாதிக்கசெய்யும்   மாற்ற அம்சங்களாகும். விலையினை பாதிக்கக்கூடிய பல அம்சங்கள் இருக்குமானால் ஒரே விலை என்னும் நியமன விலை (ethnocentric pricing ) யினை கொள்வதென்பது கடினம்.

ஒரு நாட்டிளலுள்ள குறிப்பிட்ட பொருள் இன்னொரு நாட்டில் அதே திறனுடன் இருக்காது பொதுவாக நிறுவனங்கள் பொருட்களின் அறிமுகம் மற்றும் மேம்படுத்தும் சமயங்களில் அதிக விலையினை கொண்டிருக்கும். எனவே ஒருபொருளை அறிமுகபடுத்தும் போதோ மேம்படுத்தும் போதோ ஏற்றுமதி விலை அதிகமிருக்கும். பெரும்பாலான சமயங்களில் ஏற்றுமதி விலை வெளிநாட்டு சந்தையில் நிலவும் , தேவை மற்றும் வழங்கல் ,போட்டி , வெளிநாட்டு சந்தை விலை போன்ற பல மையங்கள்(polycentric pricing) தீர்மானிக்கும் .

ஏற்றுமதி விலையிடல் தொடர்பாக சரக்கு பரிமாற்ற அடக்க செலவுகளை யார் பொறுப்பேற்றுக்கொள்வது என்ற வர்த்தக சரக்கு பரிமாற்ற விதிமுறைகளில் கூறப்பட்டிருக்கும். உற்பத்தி நிலை (Ex Works ) என்றால் உற்பத்தி இடத்தில் அதன் விலையினை குறிக்கும் மற்ற சரக்கு பரிமாற்ற செலவுகள் வாங்குபவர்களின் பொறுப்பாகும்,வாங்குபவர் விற்பனை இடத்தில் பொருளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது பொருள்.

இலவச அனுப்புகை (Free carrier ) என்பது வாங்குபவர்களின் விருப்பப்படி பொருட்களை சரக்கு வாகனத்தில் ஏற்றியனுப்புவது வரையுள்ள செலவுகளை பொருட்களின் விலை உள்ளடக்கியிருக்கும்,மாற்ற செலவுகள் வாங்குபவர்களை பொறுத்த்தது என்று அர்த்தம். கப்பல் வரை இலவசம் (Free alongside ship )  என்பது பொருட்களை துறைமுகம் வரை எடுத்து சென்று ,அதனை சேமிப்பு கிடங்கில் இறக்கிவைப்பது வரையிலான செலவுகளை பொருட்களின் விலை உள்ளடக்கியிருக்கும் என்று அர்த்தம்.. இலவச கப்பல் வரை (Free on board vessel ) என்பது கப்பலில் பொருட்களை ஏற்றி வைப்பது வரையிலான செலவுகளை உள்ளடக்கியது என்று அர்த்தம். அடக்கம் மற்றும் சரக்கு சுமை செலவு (Cost and freight ) என்பது பொருட்களை அனுப்பிவைகின்ற செலவுகளை உள்ளடக்கியது என்று அர்த்தம்; விற்பவர் காப்பீடு தொகையினை விலையில் சேர்த்து சரக்கு சுமை செலவு காப்பீடு (cost, insurance, and freight ) என்றும் செயல்படுத்துவர் .

ஏற்றுமதி தொகை செலுத்தல் (Export Payments)

ஏற்றுமதியில் தொகையினை பெற முன்கூட்டியே தொகையினை செலுத்திவிடுவது (Cash in advance ) , கடன் உறுதி கடிதம் (letter of credit ) ,திறந்த கணக்கு (, open account ) , சரக்குநிலை (consignment) பண்டமாற்று (countertrade ) போன்ற பல வழக்கமான முறைகள் உள்ளன. முன்கூட்டியே தொகையினை செலுத்திவிடும் முறையில் பொருட்களை அனுப்புவதற்கு முன்பே அதற்குரிய தொகையினை ஏற்றுமதியாளர் பெற்றுவிடுவது ,இதில் தொகையினை பற்றி ஏற்றுமதியாளர் கவலை கொள்ள வேண்டியதில்லை; ஆனால் பொருட்களுக்குரிய தொகையினை  முன்கூட்டியே வாங்குபவர்கள் செலுத்திவிடுவதால் பொருட்களை உற்பத்தி செய்வதில் அனுப்பிவைப்பதில்  ஏற்படும் தாமததினால் வாங்குபவர்கள் அதனை விற்பதிலும் ,சந்தை மேம்படுத்தலிலும் ஏற்படும் தாமதங்களை பற்றி கவலைபடுகின்றனர் எனவே ஏற்றுமதியில் முன்கூட்டியே தொகையினை செலுத்திவிடுகிற முறை சில நெருக்கடிகளை தருகிறது . எனவே முன்கூட்டியே தொகையினை செலுத்திவிடுகிற முறை பரவலான முறையன்று.

பொதுவாக பெரும்பாலும் வழக்கத்தில் நிலவுகிற ஏற்றுமதி தொகை செலுத்தும் முறை கடன் உறுதி கடிதம் (letter of credit ) ஆகும் இது ஏற்றுமதியாளர்கட்கு ஏற்றுமதி தொகையினை பெற இறக்குமதியாளர்களின் வங்கியிடமிருந்து தரப்படுகிற உத்தரவாதமாகும். திறந்த கணக்கு (, open account ) முறையில் இறக்குமதியாளர் தனது கணக்கில் தொகையினை வரவு வைத்துக்கொண்டு பிறகு தரும் முறையாகும் இந்த முறையில் வாங்குபவர்கள் நம்பக் கூடியவர் களாயிருக்க வேண்டும்.

சரக்குநிலை (consignment) முறையில் ஏற்றுமதியாளர் பொருட்களை வெளிநாட்டில் உள்ள ஒரு இடைத்தரகர் நிறுவனத்திற்கு அனுப்பிவைப்பார் ,அவர்கள் ஏற்றுமதியாளர் சார்பாக பொருட்களை விற்பனை செய்வர். ஆனால் ஏற்றுமதியாளருக்கு நம்பகமான நல்ல இடைத்தரகர் கிடைக்காவிட்டால் இந்த முறை உகந்த தாகாது . இறுதியான தொகை செலுத்தும் பண்டமாற்று (countertrade ) முறையில் ஏற்றுமதி தொகையினை செலாவணியாக இன்றி பொருட்களாகவே பெற்றுக்கொள்ளும் முறையாகும்.

உலக பொருளாதார இயக்கத்தில் நிலவும் கடுமையான போட்டியினால் பொருட்களின் கொள்ளடக்கத்தின் சீரான முக்கியத்துவத்தை அதிகம் இயம்ப தேவையில்லை. சீரற்ற கொள்ளடக்க நிர்ணயம் விற்பனை வேண்டல் (sales orders ) இழப்போ அல்லது இலாப இழப்போ ஏற்பட ஏதுவாகும். விற்பனை மேம்பாடு மற்றும் உலக வர்த்தக போட்டியில் ஏற்றுமதி விலையிடல் என்பது முக்கிய கருவியாகும் . ஏற்றுமதி சந்தையில் போட்டியிடும் உள்நாட்டு உற்பத்தியாளர்கள், வேற்று நாட்டு உற்பத்தியாளர்கள் ,உள்நாட்டு சந்தையிலேயே  போட்டியிடும் வேற்று நாட்டு உற்பத்தியாளர்கள் முதலியவர்களை ஏற்றுமதியாளர்கள் தந்திக்க வேண்டியுள்ளது. அடக்க விலை,தேவை ,போட்டி இந்த மூன்றும் விலையினை தீர்மனிகின்ர முக்கிய அம்சங்களாகும். ஏற்றுமதி விலை கூடிய வரை பொருத்தமானதாக யிருக்க வேண்டும் /

ஏற்றுமதிக்கு விளையிடல் என்பது உள்நாட்டு விளையிடல் தன்மையில் மலும் சில அம்சங்களை கருத்தில் கொண்டு செயல்படுவதாகும். . இந்த பரிசீலனைகள் சந்தை நிலவரம் , இலக்கு நாட்டில் நிலவும் அதேபோன்ற பொருட்களின் விலையின் ஒத்த தன்மை , குறிப்பிட்ட நாட்டை அடைவற்கு  மேலுமுள்ள சரக்கு பரிமாற்ற செலவுகள், வங்கி செலவுகளை உள்ளடக்கியதுடன் நின்றுவிடுவதில்லை. ஏற்றுமதி ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள வெளிவர்த்தக சுருக்கம் (Incoterm ) எந்தெந்த கொள்ளடக்கத்தினை விலையுடன் சேர்ப்பது, தொகியினை பெற்றுக்கொள்ளும் முறைகளையும் விவரிக்கிறது .பல ஏற்றுமதி யாளர்கள் இவற்றை கருத்தில் கொள்ள தவறி விடுவதால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.

உலக வர்த்தகத்தில் கொள்ளடக்கம் மற்றும் விளையிடல் எப்போதும் சுலபமானது அல்ல. வளமான வாடிக்கையாளர்கட்கு அதிக பட்ச விளையிடல் (forming a niche market), அல்லது சந்தை ஊடுருவலுக் கேர்ற வகையில் குறைந்த பட்ச விளையிடல் போன்ற நிலைகளில் ஏற்றுமதியாளர்கள் அடிக்கடி ஐயங்கொள்கின்றனர். விளையிடலை ஏற்றுமதியாளர்கள் அதிக முக்கியத்துடன் ஏனைய ஏற்றுமதிக்கு தேவையானதன்மைகளுடன் ஏற்றுமதியில் வெற்றி பெற கருத்தில் கொள்கின்றனர்.

ஏன் ஏற்றுமதி விலைகள் மாறுபடுகினறன:

ஏற்றுமதி விலையிடலில் அந்த சந்தைக்கேற்ற கொள்ளடக்கம் ,தேவை ,போட்டி நிகழ்வுகளை அறிந்து கொள்வது அவசியமாக்றது. தேர்வு  செய்த  சந்தையில் நிலவும் தன்மைகளை கவனமுடன் ஆய்ந்து ஏற்றுமதி விலையினை நிர்ணயிக்கின்ற முறையினை சீராக ஆராய்ந்து வழிவகைப் படுத்துவது இலாபகரமான வர்த்தகத்திற்கும் ,போட்டியிட இயலுமா என்பதை தீர்மானிக்கும்.

ஏற்றுமதி விலையினை கணக்கிடும் தேர்வுகள் :

கொள்ளடகம் – கூடுதல் (“cost-plus” ) அணுகுமுறை வழக்கமான விலை கணக்கிடல் முறையாகும். விலையிடல் என்பது உள்நாட்டு விலையின் கூறுகளை உள்ளடக்கியது ஆனால் இவற்றுடன் சேர்த்து கூடுதலாக ஏற்றுமதி விலையினை வடிவமைகின்றனர். விகிதகொள்ளடக்க (Marginal ) நுட்பத்தை பயன்படுத்துவதல ஏற்றுமதி சந்தையில் நுழைய உதவும் போட்டியிடக்கூடிய விலையினை நிர்ணயிக்க இயலும். இந்த முறையில் ஒரு பொருளின் அடிப்படை விலையினை பயன்படுத்தி அதனை உற்பத்தி செய்யும் நிலையான செலவுகளுடன் / விற்பனை அளவுடன் விகிதப்படுத்தி ,அந்த பொருளின் உற்பத்தி மற்றும் விற்பனை செலவினை நிர்ணயிப்பதாகும். இதில் நிலையான அளவில் விற்பனை அளவு தொடர்ந்து நிலையாக இருக்குமா என்பதை உறுதி செய்து கொண்டே விகித கொள்ளடக்க (Marginal ) விலையினை கவனமுடன் நிர்ணய படுத்த வேப்டும்

————- ——– —– மேலும் தொடரும்