வெளிநாட்டு சந்தை

மலர் –1 இதழ் – 5

வெளிநாட்டு சந்தை நோக்கங்கள்

வெளிநாட்டு சந்தை நோக்கங்களை தீர்மானிப்பது விலையிடல் ஆய்வில் முக்கிய அம்சமாகும். எடுத்துக்காட்டாக ஒரு நிறுவம் புதிய சந்தையில் நுழைய நீண்ட கால சந்தை வளர்ச்சி அல்லது உபரி உற்பத்திக்கான சந்தையா என்பதைமுதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். பல் நிறுவனகள் வெளிநாட்டு சந்தையை இரண்டாம் தர சந்தையாக எண்ணி குறைவான விற்பனை அளவு விகிதங்களையே எதிர்பார்க்கின்றன. இது விளையிடல் தீர்மானங்களை இயற்கையாகவே பாதிக்கின்றன. விலையிடல் மற்றும் சந்தைபடுத்தும் நோக்கங்கள் பொதுவானதகவோ அல்லது குறிப்பிட்ட வெளிநாட்டு சந்தைக்ககாகவோ வடிவமைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தனி நபர வருமானத்தில் பத்தில் ஒருபங்கு கொண்ட வளரும் நாடுகளில் விற்பனை செய்யும் நோக்கம் ஐரோப்பிய அல்லது ஜப்பான் நாட்டில்  விற்பனை செய்யும் நோக்கத்திலிருந்து மாறுபட்டிருக்கும்.

கொள்ளடக்கம்

ஏற்றுமதி பொருளாதார தன்மையில் ஏற்புடையதாக அமைய உற்பத்தி விலையினை கணக்கிட்டு பொருளை சந்தைக்கு வரும் தன்மை முக்கிய அம்சமாகும். பல ஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி விலையினை அடக்கம் – இலாபம் (cost-plus ) முறையில் கணக்கிடுகின்றனர். இந்த அடக்கம் – இலாபம் (cost-plus ) முறையில்  ஏற்றுமதியாளர் உள்நாட்டு உற்பத்தி செலவு , நிர்வாகம் ,ஆய்வு மற்றும் மேம்பாடு ,உபரி செலவுகள் ,சரக்கு அனுப்பும் செலவுகள், பகிர்மணர் இலாபம் , சுங்க செலவுகள் மற்ரும் இலாபம் முதலியவைகளை கூட்டி கணக்கிடுகின்றனர் . இந்த விலையிடல் அணுகுமுறை ஏற்றுமதி விலையினை உயர்த்தி போட்டியிடும் தமையினை பாதிக்கச்செய்யும் நிலைக்கு கொண்டு வரும்  இது உள்நாட்டுவிலை  யிடலைப்போல் உற்பத்தி –வெளி (ex-factory) விலையாக இருப்பதால் ஏற்றுமதி செலவுகளை கூட்டும் போது              வாடிக்கையலை விலையினை அதிகரிக்கச்செய்யும்.

சந்தை நுழைவுக்கு விகித விலையிடல் (Marginal cost pricing) முறை அதிக சந்தை போட்டியிணை சந்திக்க கூடியதாயிருக்கும் .இந்த முறை நேரடியாக பொருள் உற்பத்தி விற்பனை மற்றும்  ஏற்றுமதி  செலவுகளை உள்ளடக்கி இழப்பு ஏற்படா வண்ணம் அடிப்படை விலை யிடலாக அமையும் . எடுத்துக்காட்டாக ஏற்றுமதி சந்தைகேற்ப விற்பனை பொருளில் செய்யும் மாறுதல்கள் , அளவு அல்லது அடையாள வடிவ மாறுதல்கள் கூடுதலாயமையும். உள்நாட்டு உற்பத்தி விலை குறையும் போது ஏற்றுமதி கொள்ளடக்கமும் குறைய வாய்ப்புண்டு.

ஏற்றுமதி விற்பனையில் ஏற்படும் கூடுதல் செலவுகளவான :

Ø     சந்தை ஆய்வு மற்றும் கடன் நேர்மை (credit ) ஆய்வு

Ø     வணிக பயணம்

Ø     வெளிநாட்டு தகவல் தொடர்பு ,தொலைபேசி அஞ்சல செலவுகள்

Ø     மொழிமாற்ற செலவுகள்

Ø     தரகு , பயிற்சி செலவுகள் மற்றும் வெளிநாட்டு முகவர்களுக்கான செலவுகள்

Ø     ஆலோசகர் மற்றும் சரக்கு அனுப்பும் செலவுகள்

Ø     பொருள் மறு சீரமைப்பு அண்ட் சிறப்பு பொத்திதல் (  special packaging ) செலவுகள்

ஏற்றுமதி பொருளுக்கான கொள்ளடக்கத்தினை கணக்கிட்ட பிறகு ஏற்றுமதியாளர் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கான சீரான விலையினை வடிவமைக்க வேண்டும் .

சந்தையின் தேவை (Market Demand )

பெரும்பாலான நுகர் பொருட்களுக்கு தனிநபர் வருமான கணக்கிடல் சந்தையின் வாங்கும் தன்மைக்கு சிறந்த அல்வவீ டாகும் . சில எரிபொருள் (petrol ) போன்ற அதிக தேவை பொருட்கள் விற்பனை விலையினை குறைவான தனிநபர் வருமான தன்மையிலும் பாதிக்காது. அதிக குறைவான தனிநபர் வருமானமுடைய நாட்டு சந்தைக்கு ஏற்றுமதி செய்பவர்கள் பொருட்களை எளிமைப்படுத்தி விற்பனை விலையினை குறைப்பது சிறந்த தீர்வாகும். செலாவணி ஏற்ற இறக்கங்கள் பொருட்களை வாங்கும் தன்மையினை மாற்றியமைக்கும் என்பதை நிறுவனம் கருத்தில் கொள்ளல் அவசியம் எனவே சந்தை மாற்றம் மற்றும் வெளி செலாவணி முதலியவைகளை விலையிடலில் கொள்ளல் அவசியம் . நிலையான வாடிக்கையாளர்களை நிறுவனம் முன்கூட்டியே அறிந்து கொள்ள வேண்டும். ஒரு நிறுவனத்திற்கு வளரும் நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்கள் புலம் புலர்ந்தோராகவோ (expatriates ) அல்லது உயர் நிதிநிலையினராகவோ இருந்தால் கூடுதலான விலையிடல் குறைவான தனிநபர் வருமான தன்மையிலும் ஏற்புடையதாய்மையும்.

சந்தை போட்டி

உள்நாட்டு சந்தையில் சில நிறுவனங்கள் போட்டியாளர்களின்                 விலையிடல் கொள்கைகளை கருத்தில் கொள்ளாமல் விலையினை நிர்ணயம் செய்கின்றன. இதே நிலை ஏற்றுமதியில் நிகழ்வதும் உண்டு அதனால் ஏற்றுமதி சந்தையில் போட்டியாளர்களின் விலையினை பரிசீலிக்க நேரிடும்போது சிக்கல்களை தருகின்றன . வெளிநாட்டு சந்தையில் அதிக போட்டியாளர்கள் இருந்தால் ஏற்றுமதியாளர் சந்தையில் தனது விற்பம்னை பங்கினை உறுதி செய்திட சந்தை விலைஅல்லது அதற்கு குறைவான விலையிடல் தீர்மானத்தில் முனையும் தன்மை சீராயிராது . குறிப்பிட்ட வெளிநாட்டு சந்தையில் ஒரு பொருள் அந்த சந்தைக்கு புதிய அறிமுக பொருளாக இருந்தால் உள்நாட்டு விலையினை விட அதிக விலையிடலுக்கு வாய்ப்புண்டு.

விலையிடல் சுருக்கம்

பொருள் விலையிடலில் கீழ்கண்ட அம்சங்களை கருத்தில் கொள்ள வேண்டும் :

Ø     வெளிநாட்டு சந்தை நோக்கங்களை தீர்மானிப்பது

Ø     ஏற்றுமதி பொருளின் விலையினைஏற்புடையதாக அமைப்பது

Ø     சுங்க வரி மற்றும் ஆய தீர்வுகளை விலையுடன் சேர்ப்பது

Ø     ஏற்றுமதிக்கு பயன் தராத உள்நாட்டு விளம்பர செலவுகளை சேர்க்காமல் தவிர்ப்பது

விலைப்புள்ளி மற்றும் ஒப்படைப்புப் பட்டியல் (Quotations and Pro Forma Invoices )

பல ஏற்றுமதி பரிவர்த்தனைகள் குறிப்பாக முதன் முதலாக துவங்கும் போது நெளிநாட்டு வணிக கேட்பும் தொடர்ந்து விலைப்புள்ளி கோரும் வேண்டுகோளும் வரும் . விலைப்புள்ளியினை  ஒப்படைப்புப் பட்டியலாக அனுப்புவது ஏற்றுமதிக்கு உகந்த முறையாகும்.  பொருள் .அதன் விலை , ஏற்றுமதிக்கான நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசம்,விபனை நடைமுறைகள் மற்றும் தொகையினை செலுத்தும் விதிமுறைகளை ஒரு விலைப்புள்ளி விவரிக்கும். வெளிநாட்டு இறக்குமதியாளர் நமது ஏற்றுமதி பொருள் பற்றி அதிக அறிமுகமில்லாத வராகையால்  வெளிநாட்டு விலைப்புள்ளி உள்நாட்டு விலைப்புள்ளியினைவிட அதிக விவரங்களை கொண்டிருக்கும். விவரங்கள் கீழ்கண்ட 15 அம்சங்களை உள்ளடக்கியது

௧. விற்பவர் மற்றும் வாங்குபவர்களின் பெயர் மற்றும் முகவரி

௨. வாங்குபவரின் கேட்பு மடல் தேதி மற்றும் பார்வை எண்

கோரப்பட்ட பொருட்களை பற்றிய முழு விவரங்கள் அடங்கிய பட்டியல்

ஒவ்வொரு பொருளின் விலை ( பொருள் புதியத அல்லது உபயோகிக்கப்பட்டதா என்பதை குறிப்பிட்டு செலாவணி இடர்களை குறைக்க விலைப்புள்ளியினை அமரிக்க நாணயத்தில் குறிப்பிடுதல் ஏற்றதாகும்

. சரக்கின் நிகர மற்றும் மொத்த எடையினை ஏற்ற நிறையிடலில் குறிப்பிடவேண்டும்

௬. ஏற்றுமதி பொதிதலின்  மொத்த கன அளவு மற்றும் பரிமாணம் (cubic volume and dimensions )

௭. வணிக தள்ளுபடி

.சரக்கிபை சேர்க்கும் இடம்

௯. விற்பனை விதிமுறைகள்

தொகை செலுத்தும் முறைகள்

௧௧. காப்பீடு மற்றும் சரக்கு அனுப்பும் செலவுகள்

௧௨.  விலைப்புள்ளிக்கான கால அளவு

௧௩. வாடிக்கையாளர் மொத்தமாக செலுத்த வேண்டிய தொகை

௧௪. உள்நாட்டு துறைமுகம் அல்லது விமான நிலையத்திலிருந்து ஏற்றுமதி செய்யும் தேதி நிர்ணயம்

௧௫ விற்பனைக்கான செலாவணி

மேலே விளக்கப்பட்டுள்ள ௧௫ அம்சங்களுடன் மேலும் இரு அறிவிப்புகளை. ஒப்படைப்புப் பட்டியல்  சரியானது மற்றும் உண்மையானது என்றும் எந்த நாட்டை சேர்ந்தது என்றும் ஒரு ஒப்படைப்புப் பட்டியல்  உள்ளடக்கியிருக்க வேண்டும்

ஒரு ஒப்படைப்புப் பட்டியல்  இறக்குமதி உரிமம் , கடன் உறுதி மடல் திறப்பு (a letter of credit ) அல்லது நிதி ஏற்பாடு போன்றவைகளுக்கு சான்றாக அமையும் .எத்தகைய உலக வர்த்தக விலைப்புள்ளியில் ஒப்படைப்புப் பட்டியல்  பயன்பாடு மிக சிறந்த தன்மை கொண்டதாகும் .சரக்கு அனுப்புவதற்கு முன்னர் இறுதியான விலைபட்டியலை தயாரிக்கும் போது உள்நாட்டு வர்த்தக துறை அல்லது உரிய நிறுவனகலை அணுகி இறக்குமதி செய்யும் நாட்டின் விதிமுறைகட்கு  ஏற்ற வகையில் சேர்க்க வேண்டிய அம்சங்களை சேர்க்க வேண்டும் . ஏற்றுமதியாளர் ஒரு சிறப்பான விலையினை ஏற்றுக்கொண்டாலோ அல்லது அதற்கு உறுதியளித்தாலோ அதற்குரிய கால அவகாசத்தை சிறப்பாக குறிப்பிட வேண்டும்.மேலும் விலைப்புள்ளி முன் அறிவிப்பின்றி மாறுபடலாம் என்பதை குறிப்பிட வேடியது முக்கியமாகும்.

விற்பனை விதிமுறைகள்

எந்த விற்பனை ஒப்பந்தத்திலும் ,வர்த்தக் ஒப்பந்தத் இழப்பு அல்லது விற்பனை இழப்பு ஏற்படுத்தும் வகையில் குழப்பமாக அமையாமல்  சரக்கு அனுப்பும் விதிமுறைகளை பொதுவாக அறிந்து கொள்ளும் வகையில் அமைக்க வேண்டியது மிக முக்கியமாகும். உலக வர்த்தக விதிமுறைகள் உள்நாட்டு வர்த்தக விதிமுறைகளை போலவே இருந்தாலும் மாறுபட்ட அர்த்தங்களை கொண்டிருக்கும் . இந்த காரணங்களுக்காக ஏற்றுமதியாளர் விலைப்புள்ளி   மற்றும் ஒப்படைப்புப் பட்டியல்  தயாரிக்கும் போது இத்தகைய குறிப்பீடுகளை அறிந்திருக்க வேண்டும்..

உலக வர்த்தகத்தில் கீழ்கண்ட சில குறிப்பீடுகள் அதிக புழக்கத்தில் உள்ளன அவையவன் :

Ø கொள்ளிடம் ,  சரக்கு பரிமாற்ற செலவு , காப்பீடு : (CIF (cost, insurance, freight): குறிப்பிட்ட பெயரிடப்பட்ட அயல் நாட்டு துறைமுகத்தை அடையும் வரை விலை ( கப்பீடினை சேர்த்து) – இது கொள்ளிடம் ,  சரக்கு பரிமாற்ற செலவு துறைமுகம் வரை ஆகக்கூடிய சரக்கு பரிமாற்ற செலவுகள் மாற்ற உபரி சரக்கு இறக்கும் செலவுகள் வரை கொண்டது – இது கடல் வழி பரிமாற்றத்திற்கு மட்டுமே உரியது

Ø கொள்ளிடம் ,  சரக்கு பரிமாற்ற செலவு (CFR (cost and freight): இது சரக்கு அடையும் பெயரிடப்பட்ட துறைமுகம் வரை பொருளின் விலை – சரக்கு பரிமாற்ற செலவுகளை உள்ளடக்கியது.வாங்குபவர் கப்பேடு செலவுகளை ஏற்றுக்கொள்கிறார் – இது கடல் வழி பரிமாற்றத்திற்கு மட்டுமே உரியது

Ø  சரக்கு ஊர்தி செலவுகளுடன் மற்றும் CPT (carriage paid to) and சரக்கு ஊர்தி காப்பீடு செலவுகளுடன் CIP (carriage and insurance paid to) : இது பொருள் அடைய வேண்டிய இடம் வரை அதாவது அயல்நாட்டில் ஏற்படும் சரக்கு பரிமாற்ற செலவுகளையும் சேர்த்து

Ø உற்பத்தியிடத்திற்கு வெளியில் EXW (ex works): பெயரிடப்பிட்ட உற்பத்தியிடத்தில் பொருளின் விலை ,இதில் விற்பவர் உற்பத்தி நாட்டில் வாங்குபவர் குறிப்பிட்டுள்ள இடத்தில் குறிப்பிட்ட காலத்திற்குள் சேர்த்து விடுவது அதற்கு மேலாகும் செலவுகள் வாங்குபவர்களை பொறுத்தது

Ø கப்பல் வரை (FAS (free alongside ship) : பெயரிடப்பட்ட ஏற்றுமதி துறைமுகம் வரை மற்றும் சரக்கு ஏற்றும் கப்பல் வரை துறைமுக நுழைவு செலவுகள் வரை மற்ற சரக்கு ஏற்றும் ,கடல்வழி சரக்கு பரிமாற்ற செலவுகள் ,காப்பீடு செலவுகள் வாங்குபவர்களை பொறுத்தது

Ø பெயர் குறிப்பிட்ட இடம் வரை FCA (free carrier) : இது பெயர் குறிப்பிட்ட ஊர்தி மூலம்  பெயர் குறிப்பிட்ட கப்பல் வரை விற்பவர்களை பொறுத்தது . இது பல்வகை சரக்கு பரிமாற்றம் , சரக்கு பொடட்க நிலையம்  (container) அல்லது விமான ஊர்தி செலவுகள் உட்பட அனைத்தையும் உள்ளடக்கியது .

Ø சரக்கு ஏற்றும் கப்பல் வரை (FOB (free on board) : இது பெயர் குறிப்பிட்ட இடம் மற்றும் சரக்கு ஏற்றும் கப்பலில் சரக்கு ஏற்றும் செலவுகள் உட்பட விற்பவர்கள் ஏற்றுக்கொண்டு விலை குறிப்பிடுவது

Ø கப்பல் நிர்வாகி முறை (Charter Terms)

  • சரக்கு ஏற்றுவது இலவசம் (Free In ) இதில் கப்பல் நிர்வாகம் சரக்கு ஏற்றும் பொறுப்பினை இலவசமாக செய்துதருவது
  • சரக்கு ஏற்றுவது மற்றும் இறக்குவது இலவசம் (Free In and Out ): இதில் கப்பல் நிர்வாகம் சரக்கு ஏற்றுவது மற்றும் இறக்கும் பொறுப்பினை இலவசமாக செய்துதருவது
  • சரக்கு இறக்குவது இலவசம் (Free Out ) இதில் கப்பல் நிர்வாகம் சரக்கு  இறக்கும் பொறுப்பினை இலவசமாக செய்துதருவது

இதுபோன்ற விற்பனை விதிமுறைகளை சீராக பயன்படுத்துவது மிக முக்கியமானதாகும் சிறிய அளவிலான புரிந்துகொள்ள இயலாத தவறுகள் ஒப்பந்த வேண்டுகோள்களை மீறுவதாக அமைந்து முழு ஏற்றுமதி பரிவர்தனை செலவுகளையும் ,தவிர்க்க வேண்டி யவைகளையும் ஏற்க நேரிடும் .

விலை புள்ளியிடும் போது ஏற்றுமதியாளர் இறக்குமதியலர்களின் தன்மை உணர்ந்து குறிப்பிட வேண்டும்  எடுத்துக்காட்டாக இயந்திரங்களை விற்பனை புள்ளி அனுப்பும் போது உற்பத்தி இடம் வரை (“EXW ) என்று குறிப்பிடுவது வெளிநாட்டிலுள்ள வந்குபர்களை பொறுத்தவரை அர்த்தமற்றது . இதனால் வாங்குபவர் மொத்த செலவுகளை கணக்கிட இயலாமல் வாங்கும் வேண்டுகோளை அனுப்பிட தயங்குவர் .

முறையான கொள்ளடக்க நடைமுறைகளின் தேவை :

கொள்ளடக்க மதிப்பீட்டின் தேவைகள்

அ. ஏற்றுமதி விலையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அனைத்து அம்சங்களையும் அடையலங்கண்டு உறுதி செய்து கொள்ளல்

ஆ.ஒவ்வொரு பொருளின் உண்மையான கொள்ளடக்க மதிப்பெட்டை கூடியவரை கணக்கிடல்

இ .நீங்கள் எதிர்பர்ர்க்ககூடிய  இறுதி விலை தேவை மற்றும் போட்டியினை சந்திக்கும் அம்சங்கள் , ஏற்றுமதி விளையிடலில் நிலவக்கூடிய விட்டுக் கொடுக்கும் தன்மை முதலியவைகளை அடிப்படையாக கொண்டு ஏற்றுமதிக்கு விளையிடும் நிலைப்பாட்டை தீர்மானிப்பது

ஈ.ஏறுமதிக்கான இறுதி விலையினை தீர்மானம் செய்வது

பல விலைப்பகுப்பாய்வு உள்ளடக்கம் :

நிகழ்வில் உள்ள போட்டியாளர்கள் இலாபம் பெரும் முறைகலை  சந்திப்பது ஏற்றுமதியில் முக்கிய சவாலாகும் .உள்நாட்டு சந்தையில் இருப்பதை விட உங்கள் நிறுவனத்திற்கும் உங்கள் வடிக்கையாளர் – –   – கட்கும் இருக்கும் தொலைவு அதிகம் என்பதையும் மேலும் பல இடைத்தரகர்கள் உள்ளனர் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் , இதனால் சந்திக்க இருக்கும் பல்வேறு வகையான விளைபகுப்புக்களான பகிர்மாண விலைபபகுப்பு , ஆவணங்களுக்கான விலைபபகுப்பு,.இடைத்தரகர்களின் வாயிலாக நிகழும் விலைபபகுப்பு, அடள்நாட்டு வணிகத்தில் நிலவும் சுங்க மற்றுமுள்ள வரித்தீர்வைகள் போன்றவைகளை கணக்கிடல் அவசியமாகிறது. இது போன்ற பல விலைபபகுப்பாய்வுகள் ஒவ்வொரு அம்சத்திலும் நம்மை பாதிக்க செய்யும்.

உள்நாட்டின் விலை அயல்நாட்டின் விலையில்ல :

இந்த விலைபகுப்பய்வு அதிக விலை அல்லது குறைந்த விகித விலை( குறைந்த இலாபம் )  நிர்ணயமாயிருக்கும்.. இது போன்ற பதிப்பு அமசன்களை கவனமாக ஆய்ந்து சீரான விலைபகுப்பய்வு திட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டியது மிக அவசியமாகிறது. வெற்றிகரமான ஏற்றுமதி விலைபகுப்பய்வுக்கு குறிப்பிட்ட சூத்திரம் இல்லை வணிக ஏற்றுமதியாளர்.உற்பத்தி ஏற்றுமதியாளர், முகவர் வாயிலாக ஏற்றுமதி செய்பவர் என்று ஒவ்வோரி ஏற்றுமதியா ளர்கட்கிடையில் இது மாறுபடும்.. போட்டியளர்களின் பலத்தையும் அவர்களின் வெளிசந்தை நடைமுறைகளையும் கவனமாக பரிசீலித்து செயல்படுவது ஏற்றுமதியாளர்களின் திறமையாகும் .

கீழ்கண்ட அம்சங்கள் அதற்கு எடுத்துக்கட்டுகளாகும் :

  • வழங்கப்படும் பொருட்களின் தன்மைகள்
  • நேரம்தவறாத மற்றும் தொடர்சியான வழங்கல்
  • பொருளின் மாறுபாடு மற்றும் வர்த்தககுறி அமைகை (brand image )
  • தரத்திற்கும் விலைக்கும் இடையிலான தொடர்பை முன்னு ணர்தல்
  • கடன் வழங்கல்

விலையிடல் மற்றும் விலைபபகுப்பு

விலையிடல் மற்றும் விலைபபகுப்பு இரண்டுக்குமிடையில் மிகுந்த வித்தியாசங்கள் உள்ளன. இதுஇரண்டுமே ஒன்றுதான் என்று பலரும் கருதுகின்றனர்.    இதிலுள்ள வேறுபாட்டு அம்சங்களாவன:

  • வாடிக்கையாளர்கட்கு வழங்குவது விலையாகும் ,பொருளுக்காண கொள்ளடக்கம் விலைபபகுப்பாகும்
  • விலை நமது இலாபத்தை உள்ளடக்கியது , விலைபபகுப்பு அந்த பொருளின் மீதான செலவுகளை உள்ளடக்கியது.
  • விலைபபகுப்பு என்பது விலைபபகுப்பு கணக்காய்வாளர்களின் முனுரிமையாகும் ,விலை என்பது சந்தைப்படுத்துபவர்களின் முனுரிமையாகும்

உலக வர்த்தக போட்டிகளை சமாளிப்பதற்கு அரசாங்கம் பல சலுகைகளையும் விதிவிக்குகளையும் பயன்பாடுகளையும் நல்குகிறது. இவைகள் விலையினை குறைக்கக் ஏதுவாயமையும் அவைகளில் சில கீழ் கண்டவைகள் ‘

  • ஏற்றுமதி பொருளுக்கு விற்பனைவரி இல்லை
  • ஏற்றுமதி பொருளுக்கு ஆயத்தீர்வை இல்லை
  • மூலப்பொருட்கள் , உபரிபொருட்கள் , நுகர் பொருட்கள் இறக்குமதிக்கு சுங்க வரியில்லா முன்னுரிமம் வழங்கப்படுகிறது
  • வருமான வரி சலுகைகள்
  • சிறப்பு இறக்குமதி உரிமம்
  • சுங்கவரி உரிமை கணகிடல் கோப்பு திட்டத்தின் மூலம் (duty Entitlement Pass Book Scheme ) சுங்கவரி கடன் வழங்கல்
  • மற்ற அரசு மானியங்கள் மற்றும் உதவி தொகைகள்

ஏற்றுமதி விளையிடலின் சிறப்பம்சங்கள்

அயல்நாட்டில் பொருட்கள்  விற்பனை தொடபுடைய  தனி அம்சங்கள் பல உள்ளன. இந்த அம்சங்கள் உள்நாட்டு விளைடுடன் ஒப்பீடு செய்து ஏற்றுமதி விலையினை தீர்மானிக்க உதவுகின்றன. அவைகளாவன பொருட்களை வழங்கும் கால அட்டவணை , தொகை செலுத்தும் வழி முறைகைகள் , பொருள் வாங்கும் அளவு ,தன்மை மற்றும் நோக்கம்.

ஏற்றுமதி பொருட்களின் விலையினை கூட்டும் அம்சங்கள்

  • சிறப்பு பொதித்தல்,அடையாளமிடல் ,குறியிடல்
  • கூடுதலான மேற்பார்வை மற்றும் முயற்சிகள்
  • ஏற்றுமதி பரிவர்த்தனை செலவுகள்
  • ஏற்றுமதி நடைமுறை செலவுகள்
  • சந்தைப்படுத்தும் செலவுகள்
  • காப்பீடு செலவுகள்

ஏற்றுமதி பொருட்களின் விலையினை குறைக்கும்  அம்சங்கள்

  • ஏற்றுமதிக்கான உதவித்தொகைகள் மற்றும் வசதிகள்
  • சுங்கவரி விலக்கு மற்றும் திரும்ப பெறுதல்
  • இறக்குமதி செய்யப்பட உபரி பொருட்கள் ,பாகங்கள் மூலம் விலை குறைக்கும் வாய்ப்பு
  • உலகளாவிய விலையில் மூலப்பொருட்கள் இறக்குமதி செய்தல்
  • குறைந்த வட்டி ஏற்றுமதி கடன்

————- ——– —– மேலும் தொடரும்