ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம்

வெளிநாட்டு வணிகம்

ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம்

முகமன் :

ஒருநாடு  முன்னேறிய நாடாக தன்னைத்தானே  மர்ற்றிக்கொள்கிற செயல்திறன் அந்நாட்டின்   அன்னிய செலாவணி கையிருப்பினை பொறுத்தே அமைகிறது. இந்த நூற்றாண்டின் துவக்கமுதல் வளரும் நாடுகளின் வரிசையில் முன்னிற்கும் நமது இந்திய துணைகண்டம் மிளிரத்துவங்கியிருக்கிறது என்பதில் துளியும் ஐயமில்லை. இந்த முனைப்பின் செயல்திறன்  யாரிடம் இருந்து துவங்குகிறது என்ற வினாவிற்கு கிடைக்கின்ற ஒரே பதில் மக்களாகிய நமது கரங்களிலிருந்துதான் எனச்சொன்னால அது மிகையல்ல ! பலவீனத்தால் பலவீனத்தை பழுதுபர்ர்க்கிற உணர்வு நமது உள்ளங்களில் கருவுறும் போது நமது மண்ணின் பலம் செரிவூட்டப்படுகிறது என்பது நிதர்சன உண்மை,

ஆக்கம் அதிர்வினாய்ச் செல்லும் அசைவிலா                                ஊக்கம் உடையான் உழை

என்கிற பொய்யாமொழிப்புலவனின் கூற்றினை மெய்ப்பிக்கும் செயல் திறன் நமது ஈடுபாட்டின் மூலமே எழிசிபெறுகிறது !

விரவிக்கிடக்கும் நமது உற்பத்தி கூறுகள் எல்லை கடக்கின்ற நேரத்தில் நமது முனைப்படுகள் மிளிரத்துவன்குகிறது இத்தகைய செயல்வினை வெளிப்பாடுகள் நமது ஏற்றுமதி- இறக்குமதி முனைப்புகட்கு உத்வேகத்தை நல்குகிறது !

இத்தகைய கோணத்தில் நாம் சிந்திக்க துவங்கிய வேளை நமது எண்ணங்களில் துளிர்த்ததுதான “ வெளிநாட்டு வணிகம் “ என்கிற இணையதள இதழ்  ஆக்கத்தையும் ஊக்கத்தையும் நல்கிடும் இந்த இணையதள இதழினை உங்களின் முன் வைப்பதில் முழு நிறைவு பெற விழைகிறோம் .

இந்த முனைப்பின் முகமன் இன்றைய தினம் துவங்கினாலும் தொடர்ந்து வரும் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் தொடர்பான செய்திகள்,விளக்கங்கள் ,செயல்முறைகள்,மேலாண்மை முனைவுகள் இன்னபிற அத்தியாவசியங்களையும் உள்ளடக்கிய இதழாக உங்களை வந்தடையும் .

  • ஒரு நாட்டின் உற்பத்தி பொருட்கள் தன்னாட்டு எல்லை கடந்து சந்தை படுத்தப்படும் நிலையினை ஏற்றுமதி என்கிறோம் .
  • பன்னாட்டு பொருட்கள் ,தொழில்நுட்பம், இயந்திர தளவாடங்கள் நம் நாட்டில் கால்பதிக்கும் செயலை இறக்குமதி என்கிறோம் .

ஏற்றுமதி இறக்குமதி ஒன்ரைச்சார்ந்த மற்றொன்று , இறக்குமதி இன்றி ஏற்றுமதி வளராது , ஏற்றுமதி இன்றி இறக்குமதி ஊக்கம் பெறாது. இது வெளிப்படை உண்மை

தங்களின் மேலான கருத்துக்கள் ,வினாக்கள் ,எதிர்பார்ப்புக்களை தயக்கமின்றி தெரிவிக்க வேண்டுகிறோம்.இந்த முனைப்பில் எங்களது பணி தொடரும் ………………….

என்றும் அன்புடன்

இராமநாதன் நாகசாமி – வெளிநாட்டு வர்த்தகம் (முதுகலை)

கருதுகொள்கலன் ( suggesting Box)

Suggesting Box

பெயர்
மின்னஞ்சல்
தொலை ( அ) கை பேசி
கருத்துக்கள்

அனுப்பு

மலர் –1 இதழ் – 1

திரை கடலோடியும் திரவியம்  தேடு என்கிற மொழிக்கேற்ப நமது முன்னோர்கள் கடல் கடந்து வணிகம் செய்த செய்திகள் பண்டைய இலக்கியங்களில் நிறையவே காணக்கிடைகின்றன ,இருந்தாலும் இன்றைய ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் பற்றிய செய்திகளை இவண் வழங்கிட இந்த “வெளிநாட்டு வணிகம் இணையதள இதழ் துவங்கப்பட்டு இருக்கிறது .

முதலில் ஏற்றுமதி தேவையானவைகளை காண்போம் .

ஏற்றுமதி என்றால் என்ன ? (Understanding Export)

ஏற்றுமதி என்ற சொல்லுக்கு ஒருநாட்டின் பொருட்களை ,சேவைகளை மற்றொரு நாட்டுக்கு துறைமுக வர்ன் வழி மூலமாக அனுப்புவது என்று பொருள்படும் , இதனை கண்கூடு ஏற்றுமதி  (Visible exports )  எனலாம் , துறைமுக வர்ன் வழியின்றி சேவைகளை ,தொழில்      நுட்பங்களை ஏற்றுமதி செய்வதை மறைமுக ஏற்றுமதி  (Non Visible exports ) என்றும் பொருள் கொள்ளலாம் . பொருட்களை,சேவைகளை மற்றொரு நாட்டிற்கு விற்பவரை ஏற்றுமதியாளர் என்றும் வெளிநாட்டில் வாங்குபவரை இறக்குமதியாளர் என்றும் போருள்படும் , சுருங்க சொன்னால் தன்னாட்டு பொருட்களை ,சேவைகளை வெளிநாட்டில் விற்கும் செயலே ஏற்றுமதி எனப்படும்.

இன்றைய உலக சூழ்நிலையில் உலக வணிகம் என்பது பல்வேறு சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட நடைமுறையாக கையாளப்படுகிறது , எந்தந்த நாடுகளில் எவை எவை தேவைப்படுகிறதோ அந்தந்த பொருகளின் தன்மை உணர்ந்து சந்தைப்படுத்தும் திறன் ஏற்றுமதி  வணிகத்திற்கு இன்றியமையாத ஒன்று ! இதனை கருத்தில் கொண்டு வெளிநாட்டு சந்தை வாய்ப்புகளை முன்னறிந்து (Forecasting.  )  கொள்ள சந்தை ஆய்வு (Market Research ) ,தேவைகளின் ஆய்வு (Demand Analysis)      முதலியவைகளின் மூலம் சந்தை வாய்ப்புகளை பற்றிய முன்ணறிவு பெறமுடியும் . இது மிக மிக முக்கியமானதொன்று

சந்தை ஆய்வு செய்யாமல ஆர்வத்தில் ஏற்றுமதி  வணிகத்தில் கால்பத்தித்த சிலர் தன கையை சுட்டு கொண்டதனை நமது அனுபவத்தில் நிறையவே கண்டிருக்கிறோம் . எனவே நம்மால் செய்யகூடியது முழுதையும் முன்னறிந்து கொண்ட பின்னரே ஏற்றுமதி  வணிகத்தில் முனைப்புற வேண்டும் .உங்களுக்கு அருகாமையில் இருக்கும் நாடுகளுடன் ஏற்றுமதி வணிகத்தில் கால்பதிப்பது முதல் முனைவோருக்கு பாதுகாப்பானது . முன் அனுபவமின்றி உடனடியாக விரும்பும் நாடுகட்கு ஏற்றுமதி செய்திட முனைவது அறிவுடைமை ஆகாது .மேலும் சில வெளிநாட்டு முகவர்கள் வழியாக ஏற்றுமதி செய்வது என்பது மேலும் பாதுகாப்பானது . மேலும் ஏற்றுமதி பொருட்கள் உலகத்ததரம் வாய்ந்தவைகளாகவும்                இறக்குமதியாளர்களின் தேவைகளை நிறைவு செய்வதாகவும் இருத்தல் அவசியம் .

ஏற்றுமதி மூலம் அடையும் சிறப்பு பயன் (Advantages of Exporting )

Ø     நமது சந்தை வாய்புக்களை விரிவு படுத்த இயலும்

Ø     உள்நாட்டு தேவைகட்க்கு அதிகமயிருக்கும் உற்பத்தி திறனை உயர்த்த இயலும்

Ø     உள்நாட்டு சந்தையினை நம்பியிருப்பதைவிட்டு வெளிநாட்டு சந்தை தேவைகளை நிறைவு செய்திட இயலும்

Ø     மிகுந்த உள்நாட்டு போட்டியினை தவிர்த்து குறைந்த வெளிநாட்டு போட்டி நோக்கி விரிவுபடுத்த இயலும்

எதை ஏற்றுமதி செய்வது ?

ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கு எந்த பொருளை விற்க வேண்டும் என்பதை கவனமாக தேர்வு செய்தல் மிக அவசியம் . அந்த பொருளுக்கு அந்த நாட்டில் தேவையிருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும் .ஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி பொருட்கள் தரம் வாய்ந்ததாக தனது போட்டியாளர்களின் தரத்தை மிஞ்சும் வகையில் இருக்கிறது என்பதையும் உறுதி செய்துகொள்ள வேண்டும். மேலும்  ஏற்றுமதி பொருட்கள் கூடியவரை குறைந்த உற்பத்தி செலவுகளுடன் தரம் வாய்ந்ததாக விற்பனை போட்டியில் விலை முன்னுரிமை பெறக்கூடியதாக இருத்தல் அவசியம் .அதே நேரத்தில் பொருட்கள் முறையாக குறிப்பிட்ட நேரத்தில் தொடர்ந்து விற்பனை செய்யும் வகையில் போதுமான கையிருப்பில் இருத்தல் அவசியம்.

ஏற்றுமதி பொருட்களை தேர்வு செய்யும் போது கருத்தில் கொள்ளவேண்டியவைகள் :

Ø     இறக்குமதி செய்யும் நாடு மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடு கொண்டுள்ள அந்த பொருட்களின மீதான விதிமுறைகளை , நடைமுறைகளை பற்றிய அறிவு இருத்தல் அவசியம்.

Ø     பொருட்கள் கூடியவரை உலகத்தர சிறப்பம்சங்களுடன் (ISO) இருப்பதை ஒப்பிட்டு கொள்தல் அவசியம்.

Ø     இறக்குமதி நாட்டில்  அந்த பொருட்களின மீதான இறக்குமதி  விதிமுறைகளை , நடைமுறைகளை பற்றிய அறிவு இருத்தல் அவசியம்

Ø     அந்த பொருட்கள் தொடர்ந்து கிடைக்க கூடிய வாய்ப்பு மற்றும் அதிலுள்ள இலாபம் பற்றிய அறிவு இருத்தல் அவசியம்

Ø      அந்த பொருட்களின் மீதான வரித்தீர்வை திரும்ப பெறுதல் ( Duty Drawback ) மற்றும் இறக்குமதி வரித்தீர்வை மறுபயன்பாடு (import replenishment ) பற்றிய அறிவு இருத்தல் அவசியம்

Ø      வெளிநாட்டில் நிகழ்கின்ற தேவைகள் அந்த தேவைகளில் ,தரங்களில் ,அவ்வப்போது நிகழ்கின்ற மாற்றங்கள் பற்றிய அறிவு இருத்தல் அவசியம்

Ø       தொடர்புகொள்ளும் நடுகட்கு இடையில் அந்த பொருட்களின் மீதான ஒதுக்கீடு முறை (Quota fixation ) பற்றிய அறிவு இருத்தல் அவசியம்

Ø      அந்த பொருட்கடகு அந்நாட்டில் மற்ற நாட்டு ஏற்ரறுமதியாள்ர்களால் நிலவும் சந்தை போட்டி,  அதனுள் ஊடுருவும் திறன் பற்றிய அறிவு இருத்தல் அவசியம்

Ø      ஏற்றுமதி நாட்டில் அந்த பொருட்கடகு வரித்தீர்வை முன்னுரிமை (tariff preferences ) உள்ளதா இல்லையா என்பதை பற்றிய அறிவு இருத்தல் அவசியம்

Ø      பொருத்தமான பொதிதல் (Packaging ) மற்றும் குறிப்பொட்டி (Labeling) பற்றிய அறிவு இருத்தல் அவசியம்

Ø       பொருத்தமான அந்நாட்டிற்கு அனுப்பிட தேவையான சரக்கு மாற்ற கூறுகள் ,தன்மைகள் () Mode of transport and Logistics. ) பற்றிய அறிவு இருத்தல் அவசியம்

எங்கு ஏற்றுமதி செய்வது ?

ஏற்றுமதி நாட்டை தேர்வு செய்யும் முன்பாக குறிக்கொண்ட நாட்டின் சந்தியினை (target markets) பற்றிய போதுமான விவரங்களை முதலில்           சேகரித்துகொள்ள வேண்டும் . அவையாவன முந்தைய செயல்கள் (past performance )  சந்தையின் அளவு ,அரசியல் மற்றும் பொருளாதார நடைமுறைகள் , தேர்வு செய்த பொருட்கட்கு அந்நாட்டிலுள்ள வாய்ப்பு , தேவை நிலைப்பாடு (demand stability ) முன்னேறும் நாடுகளுக்கான முன்னுரிமை வழங்கல் (preferential treatment ) குறிப்பிட்ட பொருட்களில் மற்ற போட்டி நாடுகள் செயல்படுத்தும் சந்தை ஊடுருவல் , குறிப்பிட்ட நாடுகளுக்கிடையிலான தூரம் , சரக்கு      மாற்ற் இடர்கள் , மொழி இடர்கள் , வரித்தீர்வை மற்றும் வரித்தீர்வையற்ற தடை நடைமுறைகள் (tariff and non- tariff barriers ) , உள்கட்டமைப்பு பகிர்மாணம் (infrastructure  distribution ) ,சநதையில் நிலவும் தேவை (demand ) அளவு , எதிர்பார்க்கும் சநதை நீட்டிப்பு கால அளவு (expected span of market and product ) , விற்பனை மற்றும் பகிர்மாணம் கூறுகள் (distribution channel)

சந்தை ஆய்வு அம்சங்கள்

Ø     மனித விவரங்கள் மற்றும் பருநிலை சூழல் (Demographic and Physical Environment )

  • மொத்த மக்கள் தொகை மற்றும் அடர் வளர்ச்சி நிலை (Total population and growth density trends. )
  • குறிக்கொண்ட வயதினோரின் மக்கள் தொகை பகிர்மாணம்
  • ஊரக ,ஊராட்சி , பேரூராட்சி மக்கள் தொகை பகிர்மாணம்
  • பருவ நிலை தட்ப வெட்ப மாறுபாடுகள் சந்தைப்படுத்தும் பொருட்களில் ஏற்படுத்தும் தாக்கம்
  • ஏற்றுமதி கூடத்திலிருந்து துறைமுகத்திறக்குள்ள தூரம்
  • சரக்குமாற்ற,தொலைதொடர்பு உள்கட்டமைப்பின் தரம் மற்றும் நிலை
  • சரக்கு மாற்றம் , சரக்கு கப்பல் வசதி , பொதிதல்(packaging )  , சரக்கிறக்கம் (unloading  ) போன்ற போத்மான வசதி தொடர்புகள்

Ø     அரசியல் சூழ்நிலை (Political Environment   )

  • அரசியல் அமைப்பு முறை வர்த்தக பரிமர்றங்கட்கு ஏற்புடையதாய் உள்ளதா ?
  • தனியார் வர்த்தக பரிமர்றங்களில் அரசு எந்த அளவுக்கு ஈடுபாடு காட்டுகிறது ?
  • இறக்குமதி பற்றிய அந்த அரசின் நிலைப்பாடு
  • அரசு நிலையானதா?
  • வர்த்தக தடை , வரிதீர்வை , மற்றும் ஒதுக்கீடு நீக்கம் (dismantling of quotas)  போன்றவைகளில் அரசின் நிலைப்பாடு

Ø     பொருளாதார சூழ்நிலை (Economic Environment  )

  • உயரும் அளவிலான ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தகத்திற்கு அந்நாடு உடன்படுகிறதா ?
  • பொருளாதார வளர்ச்சி நிலை முன்ணறிவு
  • நிகர தேசிய உற்பத்தி (Gross National Product ) மற்றும் நிகர் நிதி நிலை (balance of payments )
  • மொத்த பொருளாதாரத்தில் ஏற்றுமதி – இறக்குமதி விழுக்காடு பங்கு
  • அந்நாட்டின் ஏற்றுமதி – இறக்குமதி சரிவிகிதம் (ratio )
  • பண வீக்க அளவு (Rate of inflation ) , மற்றும் அந்நிய செலாவணி ஒழுங்குமுறைகள் .
  • அந்நாட்டின் தனிமனித வருமானம் (Per capita income )

Ø     தொழில் நுட்ப சூழ்நிலை (Technological Environment

  • வாடிக்கையாளர்களின் நிறை எத்ர்பர்ப்பு
  • மனோபவ நிகழுமை
  • உயரும் உற்பத்தி திறன்
  • ஆய்வு மேம்பாட்டுக்கான செலவு
  • மூலதன தேவை

Ø     சமுதாயம் மற்றும் பண்பாட்டு சூழ்நிலை

  • நுகர்வோர் பொருட்களின் மீதான செலவுகளில் வருமானத்தின் விழுக்காடு
  • மக்களின் கல்வித்தர விழுக்காடு ,கல்வித்தர உயர்வினாளன சிறப்பு பயன்கள்
  • அடையாளங்காணப்பட்ட நடுத்தர வர்க்கனத்தினரின் மக்கள் தொகை விழுக்காடு

Ø     சந்தை நுழைவு

  • நமது சந்தையுடன் குறிக்கப்பட்ட சந்தை  எந்த அளவிற்கு ஒன்றாயிரிக்கைறது
  • பொருள்களில் மாற்றம் செய்வதற்கான தேவையுள்ளதா ?
  • ஒவ்வொரு நாட்டுக்குமுள்ள பகிர்மாண சட்ட அம்சங்களை தொகுப்பு செய்வது
  • அந்த பொருட்களின் மீதான இறக்குமதி நடைமுறைகள், தொழில் நுட்ப , சுற்று சுழல் மற்றும் ஆவணங்களின் தேவை
  • அந்த பொருகளின் மீதான அறிவுசார் சொத்து பாதுக்கப்பு விதிமுறைகளின் தாக்கம்
  • வர்த்தக முரணபாடு ஏற்படும் தருணத்தில் அந்நாட்டின் நீதி அமைப்பு நியாமான ஒருதலைபட்சமற்ற பரிசீலனை வழங்குமா ?
  • வெளிநாட்டு முதலீட்டாளர்கட்குள்ள வரி விதிப்பு முறைகள் மற்றும் இலாப மாற்று  வரிவிதிப்பு முறைகள் உள்ளனவா ?

Ø     ஒரு நாட்டை எப்படி கணிப்பது

எந்த ஒரு ஏற்ருமதியாளரும் அயல் நாட்டு சண்டையில் நுழையும் போது தன்னாட்டு சந்தையிலில்லாத இடர்களை சந்திக்க நேரிடும் .நிகழும் பல இடர்களில் ஏற்றுமதியாளர்கள் சந்திக்கும் இரு         பெரும் இடர்களாவன : முன்னிறக்கும் இறக்குமதியாளர்கள் மற்றும் அந்நாட்டில் நிகழும் இடர்கள் . இறக்குமதியாளர்களின் இடர்கள் என்பது வர்த்தக ரீதியில் எழும் இடர்களாகும் . தனி நபர அல்லது நிறுவனம் திரும்ப செலுத்த வேண்டிய தொகையினை ;நிர்வாக குளறுபடி இன்னபிற காரணங்களால் செலுத்த தவறும் போது அது நேரிடையாக ஏற்றுமதி நிறுவனத்தை அல்லது ஏற்றுமதியாளரை பாதிக்கும் . அந்நாட்டின் இடர்கள் என்பது அங்கு நிழவும் அரசியல் ,பொருளாதார மற்றும் கடன் வழங்கும் தன்மையில் நிலையின்மை போன்றவைகள் திரும்ப செலுத்த வேண்டிய தொகையினை செலுத்த தவறும் நிலை உருவவாகும் . எனவே நாட்டின் இடர்கள் என்பது அங்கு நிழவும் சமுதாய ,அரசியல் மற்றும் பொருளாதார இடர்கள் என்பதைக்குறிக்கும் இதனால் வணிக வங்கிகட்கும் , பல்நோக்கு நிதி நிறுவனங்கட்கும் இடர்களை நல்கிடும்

ஒரு நாட்டில் நிலவும் பல்வேறு சுமுக இடர்களை சமாளிக்கும் தன்மையினை ஆய்வு செய்ய பல்வேறு அம்சங்கள் உள்ளன .அவையாவன : அரசியல் நிலைத்தன்மை / நிலையின்மை : நிலவும் அரசியல் நிலை அந்நாட்டின்  திரும்ப செலுத்த வேண்டிய தொகையினை செலுத்தும் திறனை நேரிடையாகவும் பொருளாதார திறனை மரறைமுகமாகவும் பாதிக்கும் எனவே இதனை ஆய்வு செய்வது இன்றியமையாதது .

  • ஒரு நாட்டின் அரசியல் பொருளாதார மற்றும் சமுதாய கட்டமைப்பு
  • நிறுவன மற்றும் சட்ட விதி ஒழுங்குமுறைகளின் கட்டமைப்பு
  • நிர்வாகதிறனில் தனிப்பட்ட மற்றும் ஒருங்கிணைந்த தன்மைகள்
  • முந்தைய மற்றும் தற்போதைய அரசியல் நிலவரங்களின் தன்மைகளும் புள்ளிவிவரங்களும்

Ø     நிகர நாட்டு உற்பத்தி (Gross Domestic Product)

  • நிகர நாட்டு உற்பத்திஇனைக்கொண்டு அந்நாட்டின் பொருளாதார வளத்தின் அளவு தனி நபர வருமான புள்ளி விவரங்களை அளவிட இயலும். நிகர நாட்டு உற்பத்திஇன மூலம் அந்நாட்டின் பொருளாதார வளத்தினை அளவிடகூடிய நம்பகத்தன்மையானது .

Ø     பணவீக்கம் (Inflation )

  • ஒருநாட்டின் கடன் சேவை இடர்கள் மற்றும் உணரப்பட்ட பணவீக்கத்தின் தன்மையினை கடன் சேவை இடர்களற்ற நாடுகளின் முந்தைய விவரங்களின் மூலம் அறிய இயலும்.முன்னேறிவரும் நாடுகட்க்கு பணவீக்கத்தின் தன்மை பத்து விழுக்காடு என்பது ஏற்புடையது

Ø     செலாவணி அளவு

Ø     ஒருநாட்டின் நிகர் நிதியிருப்பு (balance of payment )  நிலையும் ,உள் மற்றும் வெளி நாட்டு தேவைகளுக்கேற்ற சீரமைப்பும் மிக முக்கிய அம்சமாகும்  செலாவணி மதிப்பினை அவ்வப்போது மாற்றியமைப்பதென்பது அந்நாட்டின்  நிகர் நிதியிருப்பு (balance of payment )  நிலையினை சீர் செய்துகொள்ளக்கூடிய தன்மையினை உணர்த்தும் . மாற்ற நடுகட்குகந்த ஒப்பு செல்வணி நிலைக்கு  சீர் செய்துகொள்ளவதன் மூலம் நடப்பு கணக்கு நிதி நிலையினை (current account ) மேம்படுத்தி வளர்ச்சி விகிதத்தை முன்னேற்றும் .

Ø     இறக்குமதி உள்ளடக்கம் (Import Cover )

  • இறக்குமதி உள்ளடக்க தன்மையினை கொண்டு இறக்குமதி தொகையினை திரும்ப செலுத்தும் தன்மையினை அளவிட இயலும்.அதனால் ஏற்றுமதி குறையும் நேரத்தில் அந்நாடு இறக்குமதிக்கு நிதிச்சேவை அளித்திடும் தன்மையினைக்   குறிக்கும்

Ø நிகர் நிதியிருப்பு (balance of payment )

  • நிகர் நிதியிருப்பு (balance of payment )  தன்மையினை கொண்டு அந்நாட்டின் வெளிவர்த்தக துறையின் வளத்தை அறிய இயலும் அதிக அளவிலான நடப்பு கணக்கு நிதி நிலை பற்றாக்குறை  (current account  deficits ) அந்நாட்டின் நம்பகதமை மற்றும் உத்தரவாததன்மையினை சீர்கெடுக்கும்

Ø நாடுகளுக்கிடையிலான இருப்பு (International Reserves)

Ø அதிக அளவிலான – நாடுகளுக்கிடையிலான இருப்பு (International Reserves) குறைவு அந்நாட்டின் ஏற்றுமதியினை ,உள்நாட்டு உற்பத்தியினை அல்லது இறக்குமதி வளர்ச்சியினை சீரழித்து விடும்

Ø உலக பொது நிதி கடன் / ஒததுக்கீடு (IMF Credit/ Quota )

உலக போது நிதி கடன் / ஒததுக்கீடு அளவினை பயன்படுத்தும் தன்மையினை கொண்டு அந்நாட்டின் நிதி நிலை மற்றும் கடன் ஒதுக்கீட்டை குரிப்பாலுணர இயலும் உலக ப பொது நிதி கடன் / ஒததுக்கீட்டினை அதிக விகிதத்தில் பயன்படுத்துவதன் மூலம் அந்நாடு நிகர் நிதியிருப்பு (balance of payment )  குறைபாடு கொண்ண்டுள்ளதையும் அதன் தொடர்பாக பொருளாதார மாற்றங்கள் ஏற்படுத்துவதையும் அதனால் காலப்போக்கில் இடைக்கால மற்றும் நீண்டகால முரணான தாக்கத்தினை ஏற்ப்படுத்தும் என்பதை உணர முடியும்

Ø     ஏற்றுமதி கடன் உத்தரவாத குழும அளவீடு (ECGC Ratings )

  • ஏற்றுமதி கடன் உத்தரவாத குழுமம் பல்வேறு நாடுகளை ஏழு தரங்களில் வரிசைப்படுத்தியிருக்கிறது ((A1,A2,B1,B2,C1,C2, D) /இம்த தரத்தின் வாயிலாக குறிப்பிட்ட நாட்டில் நிலவும் அரசியல் இடர்களை உணர இயலும் மேலும் வெளிவர்த்தக கொடுக்கல்,வாங்கல் சீரினையும் ,பொருளாதார அடித்தளங்களையும் அறிந்து கொள்வதில் முக்கிய பாங்கு வகிக்கிறது .ஏற்றுமதி செய்ய வேண்டியுள்ள நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் நிலைகளையும் அறிய வேண்டிய அவசியம் ஏற்றுமதியாளர்க்கு உள்ளது . ஏற்றுமதி கடன் உத்தரவாத குழுமம் இது போன்ற இடர்களை அறிவுறுத்துவதன் மூலம் ஏற்றுமதியாளர்கள் அரசியல் மற்றும் பொருளாதார        இடர்களிளலிரிந்து காத்துக்கொள்ள இயலும் .

insbo555@gmail.com

————- ——– —– மேலும் தொடரும்